விடியற்காலையில் சவுதியை உலுக்கிய சம்பவம்... இராணுவத் தளம் மீது சரமாரி தாக்குதல்!
சவுதி இராணுவத் தளம் மீது சரமாரி ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி போராளிகள் குழுவின் இராணுவ செய்தித்தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை விடியற்காலையில் தெற்கு சவுதி நகரமான Khamis Mushait-ல் உள்ள இராணுவத் தளம் மீது ஏமனில் உள்ள ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள் குழு ட்ரோன் தாக்குதல் நடத்தியது என குழுவின் செய்தித் தொடர்பாளர் டவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது வரை சவுதி தரப்பிலிருந்து தாக்குதல் குறித்து எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
6 வருடங்களுக்கு மேலாக ஹவுத்தி போராளிகளுக்கு எதிரான சவுதி தலைமையிலான கூட்டுப்படை சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு தலைநகர் சானாவில் சவுதி ஆதரவளித்த ஏமன் அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றிய ஹவுத்தி போராளிகள், தொடர்ந்து எல்லை தாண்டி ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் சவுதி மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில் பெரும்பாலான தாக்குதல்களை முறியடிப்பதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
ஏமனில் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் வகையில் நாடுமுழுவதும் போர்நிறுத்த ஒப்பந்தம் வேண்டும் என அமெரிக்க மற்றும் ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.