மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸால் வெல்லப்பட்ட ஆசனங்கள் எவ்வளவு தெரியுமா?
உலகமே நேற்று உற்றுநோக்கிக் கொண்டிருந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
குறித்த தேர்தலானது அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டில் ஆறு வாரங்களாக நடத்தப்பட்டதாகும். அதாவது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.
வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும் செயற்பாடுகள் நேற்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆந்திராவின் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒடிசாவின் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
அந்தவகையில் மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸால் வெல்லப்பட்ட ஆசனங்கள் எவ்வளவு என்று குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பாஜக வென்ற ஆசனங்கள்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 292 இடங்களை கைப்பற்றியது. ஆனாலும் பாஜகவால் 272 என்ற தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையை பெறமுடியவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் 240 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. இதனால் கூட்டணி அமைத்து மட்டுமே ஆட்சியமைக்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7, லோக் ஜனசக்தி 5, ஜனசேனா 2 என மொத்தம் 292 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது.
காங்கிரஸ் வென்ற ஆசனங்கள்
இந்தியா கூட்டணிக்கு மொத்தம் 234 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் 99 இடங்களை காங்கிரஸ் தன் வசம் பெற்றுள்ளது.
சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களையும், திமுக 22 இடங்களையும் பெற்றுள்ளன.
பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைப் பெற 38 இடங்கள் தேவை.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களை தேர்தலில் 52 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சி, இந்த ஆண்டு 99 தொகுதியை கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் கைகொடுத்துள்ளன.
80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளிலும் பாஜக 36 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக கேரள மக்களவைத் தேர்தலில் பாஜக கால் பதித்துள்ளது.
திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் நின்ற சுரேஷ் கோபி வெற்றியை பதிவு செய்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமாரைவிட 74686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதோடு ஆளும் பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |