லொட்டரியில் ரூ.10 கோடி வென்றவருக்கு கையில் கிடைக்கும் பணம் எவ்வளவு?
கேரளா பம்பர் லொட்டரியில் முதல் பரிசான ரூ.10 கோடியை வென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு கையில் கிடைக்கும் மொத்த தொகை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
கோடீஸ்வரரான ஆட்டோ ஓட்டுநர்
கேரளாவில் சம்மர் பம்பர் லொட்டரி குலுக்கலுக்கான முதல் பரிசு SC308797 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது.
இந்த லொட்டரி டிக்கெட்டை வாங்கியவர், கன்னூர் மாவட்டத்தில் உள்ள கர்திகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான நாசீர் என்பவர் தான்.
இவர் கடந்த செவ்வாய் கிழமை தான் இந்த சம்மர் பம்பர் லொட்டரிக்கான டிக்கெட்டை வாங்கியிருந்தார். அதுவும் குலுக்கல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
நமக்கெல்லாம் எப்படி பரிசுத்தொகை விழும் என்று நினைத்த நாசீர், பரிசுக்கான டிக்கெட் எண்னை அறிவித்ததும் தலையே சுற்றிவிட்டதாம்.
கையில் எவ்வளவு தொகை?
ஆட்டோ ஓட்டுநர் வென்ற ரூ.10 கோடி பரிசு தொகையில் வரித்தொகை மட்டும் ரூ.2,98,12,500. இந்த தொகை போக ரூ.7,01,87,500 இருக்கும்.
மேலும், மத்திய அரசின் வருமான வரி கணக்கீட்டின்படி ரூ.10 கோடியில் சார் சார்ஜாக ரூ.1,10,30,625 செலுத்த வேண்டும். அதோடு, ரூ.16,33,725 சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் தொகையும் பரிசு வென்றவரால் வழங்கப்படும்.
மேற்கூறிய தொகையெல்லாம் பிடித்தம் போக முதல் பரிசு வென்ற நபருக்கு ரூ.5,75,23,150 வழங்கப்படும். அப்படி பார்க்கையில், வெற்றியாளருக்கு பாதிக்கு பாதி தொகைதான் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |