வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? புடின் அளித்துள்ள புதிய விளக்கம்
வாக்னர் கூலிப்படைத் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
விமான விபத்தில் உயிரிழந்த கூலிப்படைத் தலைவர்
ஆகத்து மாதம் 23ஆம் திகதி, வாக்னர் கூலிப்படைத் தலைவரான Yevgeny Prigozhin உட்பட 10 பேர் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் Prigozhin ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார். ஆக, Prigozhin புடினுடைய உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாகவும், அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
கூலிப்படைத் தலைவர் உடலில் கையெறிகுண்டு துகள்கள்
இந்நிலையில், நேற்றிரவு ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், Prigozhin மரணம் தொடர்பில் சில புதிய தகவல்களை வெளியிட்டார்.
Prigozhin மற்றும் அந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் கையெறிகுண்டுகளின் துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார் புடின்.
அத்துடன், செயின்ட் பீற்றர்ஸ்பர்கிலுள்ள Prigozhinஉடைய அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில், 10 பில்லியன் ரூபிள்கள் ரொக்கமும், 5 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருளும் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார் புடின்.
அப்படிப்பட்ட சுழலில், விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்றும், ஆனால், அந்த சோதனை நடத்தப்படவில்லை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
அதாவது, விமானத்தில் பயணித்த Prigozhinம் மற்றவர்களும் போதையில், கையெறிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம், அதுவே விமானம் வெடித்துச் சிதறக்காரணமாக அமைந்திருக்கலாம் என மறைமுகமாக தெரிவித்துள்ளார் புடின்.
மேலும், விமானம் வெளியிலிருந்து தாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததையும் மீண்டும் பதிவு செய்துள்ளார் புடின்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |