நீங்களும் ஐரோப்பிய குடிமகனாக மாறலாம்! நிரந்தர குடியுரிமை வழங்கும் பல்கேரியாவின் கோல்டன் விசா: விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் உள்ள பல இந்தியர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் நீண்ட நாள் தங்கியிருந்து, அங்கே குடியுரிமை பெற வேண்டும் என்ற கனவு இருப்பது நிதர்சனம்.!
இந்த கனவுக்கு உயிருட்டும் விதமாக, ஐரோப்பிய நாடான பல்கேரியா தன்னுடைய கோல்டன் விசா திட்டத்தின் மூலம் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஷெங்கன்(Schengen) பகுதியில் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக இணைந்த பல்கேரியா, தற்போது நிரந்தர குடியுரிமைக்கான சுலபமான வழிமுறைகள் மற்றும் 5 ஆண்டுகளில் குடியுரிமையை உறுதி செய்வதற்கான வழியையும் வழங்குகிறது.
பல்கேரியாவின் கோல்டன் விசா
கோல்டன் விசா(Golden Visa Scheme) திட்டத்தை 2023 முதல் செயல்படுத்தி வரும் பல்கேரியா, இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகளை சேராத முதலீட்டாளர்கள் தங்கள் நாட்டின் நிதி நிறுவனத்தில் குறைந்தது 512,00 யூரோக்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 4.5 கோடி) முதலீடு செய்தால் அவர்களுக்கு எளிய நடைமுறையில் குடியுரிமை மற்றும் விசா இல்லாமல் ஷெங்கன் மண்டலம் முழுவதும் பயணிப்பதற்கான அனுமதியை வழங்கி வருகிறது.
கோல்டன் விசாவின் நன்மைகள்
உடனடி நிரந்தர குடியுரிமை.
மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர்களை ஒரே விண்ணப்பத்தில் சேர்த்து குடியுரிமை பெறுதல்.
நிரந்தர குடியுரிமை பெற குறைந்தபட்சம் இத்தனை நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற விதி இல்லை.
116 நாடுகளை உள்ளடக்கிய விசா இல்லாத பயணம்.
பல்கேரியாவில் வெறும் 10% மட்டுமே தனிநபர் வரி வசூலிக்கப்படுகிறது, ஐரோப்பிய ஒன்றியங்களிலேயே மிக குறைந்த வரியை கொண்ட நாடாக பல்கேரியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோல்டன் விசாவிற்கான விண்ணப்பங்கள் 3 முதல் 6 மாதங்களில் நிறைவு செய்யப்படுகின்றன.
பல்கேரியாவின் கோல்டன் விசா பெறுவதற்கான தகுதிகள்
தகுதியான மற்றும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
குற்றப்பின்னணி எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
பல்கேரிய நிதி நிறுவனத்தில் குறைந்தது 512,00 யூரோக்கள் முதலீடு செய்ய வேண்டும்.
அதே சமயம் முதலீட்டுத் தொகையை விட அதிகமான வருமானம் ஈட்டுவது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதியாக கோல்டன் விசா விண்ணப்பம் மற்றும் செயலாக்கத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
உதாரணமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் உள்ள பல்கேரியா தூதரகத்தில் D வகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் பல்கேரியாவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து, அதற்கான பயோமெட்ரிக் சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
பல்கேரியா வழங்கும் இந்த நிரந்தர குடியுரிமையை அட்டைக்கு காலவரையறை இல்லை, ஆனால் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை குரியுரிமை அட்டையை புதுப்பிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |