வாட்ஸ் அப்பில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு பகுதியாகிவிட்டது WhatsApp. குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் என அனைவரையும் எளிதாக தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் உதவுகிறது.
ஆனால், வாட்ஸ்அப்பில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதி(Recording) இல்லாததால் பலர் சில முக்கிய குறிப்புகள் மற்றும் விவரங்களை இழந்து விடுகிறார்கள்.
வாட்ஸ்அப் நிறுவனமும் தனியுரிமை காரணங்களைக் கூறி இதுவரை அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவில்லை.
இருப்பினும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை சாத்தியமாக்கலாம்.
வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்யும் எளிய வழிமுறைகள்
அழைப்புகளை பதிவு செய்யும் செயலிகளை பதிவிறக்கம் செய்வது
;கூகுள் பிளே ஸ்டோரில் சென்று Cube ACR, Salestrail அல்லது ACR Call Recorder போன்ற செயலிகளை தேடி பதிவிறக்கம் செய்யவும்.
இந்த செயலிகள் வாட்ஸ்அப் மட்டுமல்லாமல், மற்ற பயன்பாடுகளிலும் அழைப்புகளை பதிவு செய்ய உதவும்.
அனுமதிகள் வழங்குதல்
செயலியை முதல் முறையாக திறக்கும்போது, மைக்ரோபோன் மற்றும் சேமிப்பு போன்ற அனுமதிகளை கேட்கும். இந்த அனுமதிகளை வழங்கவும்.
அழைப்புகளை பதிவு செய்ய தொடங்குதல்
வாட்ஸ்அப் அழைப்பை தொடங்கினால், நீங்கள் பதிவிறக்கம் செய்த செயலி தானாகவே அழைப்பை பதிவு செய்யத் தொடங்கும்.
பதிவு செய்யப்பட்ட ஆடியோவை எப்படி கேட்பது
அழைப்பு முடிந்த பின், செயலியில் சென்று பதிவு செய்யப்பட்ட ஆடியோவை கேட்கலாம்.
சில நாடுகளில் மற்றவரின் அனுமதியின்றி அவர்களின் அழைப்பை பதிவு செய்வது சட்டவிரோதம் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |