வுஹான் சந்தையில் கொரோனா வைரஸை பரப்பியது மனிதர்களா? சீன விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சீனாவின் வுஹான் சந்தையில் கொரோனா வைரஸை பரப்பியது விலங்குகள் இல்லை என்ற புதிய தகவலை சீன விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று
உலகையே உலுக்கிய கொரோன தொற்று முதன் முதலாக சீனாவிலிருந்து பரவியதென்பது எல்லோரும் அறிந்தது. அதே சமயம் கொரோனா தொற்று விலங்கிடமிருந்து மனிதனுக்கு தாவியதாக ஆராய்ச்சியாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
@gettyimages
குறிப்பாக வுஹான் சந்தையில் விலங்குகளிடமிருந்து பரவியதாக முன்னர் கூறப்பட்டது. இந்தநிலையில் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியது என்ற கோட்பாட்டை சீன விஞ்ஞானி ஒருவர் மறுத்துள்ளார்.
மனிதர்களால் பரவிய தொற்று
பெய்ஜிங் ரசாயன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டோங் யிகாங் கூறுகையில், வுஹானில் உள்ள ஹுவான் கடல் உணவு சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளின் மரபணு வரிசைகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரபணு வரிசைகளுடன் கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளன.
இதனால் மனிதர்களிடமிருந்து கொரோனா தோன்றியிருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
@reuters
சீன ஸ்டேட் கவுன்சில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டோங் யிகாங்(Tong Yigang), ஜனவரி 2020 மற்றும் மார்ச் 2020 க்கு இடையில் வுஹான் சந்தையில் இருந்து 1,300 சுற்றுச்சூழல் பொருட்கள் மற்றும் உறைந்த விலங்கு மாதிரிகளை விஞ்ஞானிகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சுற்றுச்சூழல் மாதிரிகளிலிருந்து வைரஸின் மூன்று வகைகளை தனிமைப்படுத்தினர்.
ரக்கூன் நாய்கள் மூலம் கோவிட் வைரஸ் பரவியது என்ற சமீபத்திய ஆய்வையும் விஞ்ஞானி மறுத்துள்ளார்.
இந்த நிகழ்வில், சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) ஆராய்ச்சியாளர் சோவ் லீ ” கோவிட் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் வுஹான், அது தோன்றிய இடமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.” என்கிறார்.
@bbc
உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கோவிட் வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனாவிடம் இருந்து தரவுகளை நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
முன்னதாக, WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது போல், சீனா போதுமான தரவுகளைப் பகிரவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவைக் கடுமையாக சாடியது.
மேலும் அவர் பெய்ஜிங் விடுபட்ட தரவுகளை வழங்கினால், "என்ன நடந்தது அல்லது எப்படி தொடங்கியது என்பதை நாங்கள் அறிவோம்" என்று கூறியுள்ளார்.