ஐரோப்பாவின் 2வது பெரிய நதி: கயிற்றில் மூலம் கடந்து சாதனை படைத்த ஹங்கேரி கலைஞர்
ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய நதியான டான்யூப்-பை கயிறு மூலம் கடந்து சென்று ஹங்கேரிய கலைஞர் லாஸ்லோ சிமெட் ஜூனியர் சாதனை படைத்துள்ளார்.
ஹங்கேரிய கலைஞர்
சாதனை சனிக்கிழமையன்று ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் சர்க்கஸ் கலைஞர் லாஸ்லோ சிமெட் ஜூனியர், ஐரோப்பாவின் 2வது நீளமான நதியான டான்யூப்-பை (Danube) கயிறு மூலம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் இந்த டான்யூப் நதியை கயிறு மூலம் கடந்து சென்ற முதல் நபர் என்ற பெருமையையும் லாஸ்லோ சிமெட் பெற்றுள்ளார்.
Prima mondiale. A #Budapest il pluripremiato artista ungherese #LászlóSimet Jr. ha attraversato il #Danubio su un filo lungo 300 metri e spesso 22 millimetri e senza fune di sicurezza, in occasione della #Giornatamondialedelcirco. pic.twitter.com/H9UmHux7BR
— Rai Radio1 (@Radio1Rai) April 16, 2023
லாஸ்லோ சிமெட் இந்த சாதனையை 300 மீட்டர் நீளம் மற்றும் 22 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட கயிற்றில் நடந்து சென்று படைத்துள்ளார்.
சாதனையின் நோக்கம்
விருதுகள் பலவற்றை வென்ற கலைஞர் லாஸ்லொ சிமெட், ஹங்கேரியின் தேசிய சர்க்கஸ் கலை மையத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக நதியை கயிற்றில் நடந்து கடந்துள்ளார்.
??Incredible world sensation in #Budapest, #Hungary today: Hungarian acrobat László Simet Jr. walked across the #Danube on a tightrope!
— Balázs Orbán (@BalazsOrban_HU) April 15, 2023
Mind-blowing skills! Congratulations!?? pic.twitter.com/bFVX7a4p8k
அத்துடன் 10வது சர்வதேச தியேட்டர் ஒலிம்பிக்கின் பிரமாண்டமான திறப்பு விழாவை குறித்து உலக சர்க்கஸ் தினத்தன்று இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் சர்க்கஸ் கலைகளை ஊக்குவிக்கவும், பரந்த கலைகளில் அவற்றை ஒருங்கிணைக்கவும் ஹங்கேரியின் தேசிய சர்க்கஸ் ஆர்ட்ஸ் சென்டர் பல்வேறு முயற்சிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.