ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகள் ஹங்கேரி மீது வீசப்பட்ட அணுகுண்டு: பிரதமர் Viktor Orban கருத்து!
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு ஹங்கேரியால் ஆதரவு வழங்க முடியாது என அந்த நாட்டின் பிரதமர் Viktor Orban தெரிவித்துள்ளார்.
சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்தநிலையில், தற்போது ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை குறைப்பதால் பாதிக்கபடும் நாடுகள் இந்த பொருளாதார தடைகளுக்கு முட்டுகட்டையாக கருத்துகள் தெரிவித்துவருகின்றன.
அந்தவகையில், ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதார தடைகள் ஹங்கேரி பொருளாதாரத்தின் மீது வீசப்படும் அணுகுண்டு போன்றது, ஆனால் ஹங்கேரியின் நலனை பாதுகாக்கும் புதிய திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்தால் பேச்சுவார்த்தைக்கு ஹங்கேரி தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த நாட்டின் பிரதமர் Viktor Orban வானொலி தெரிவித்த கருத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த புதிய பொருளாதார தடைகளை நிறைவேற்ற 5 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றும், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் குழாய்களை மாற்றியமைக்க ஹங்கேரிக்கு பெரும் முதலிடு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இத்தகைய பொருளாதார தடைகளை நிறைவேற்ற 1 முதல் 1.5 ஆண்டுகள் காலக்கெடு என்பது போதாது என்பதுடன், தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போருக்காக 4 முதல் 5 ஆண்டுகள் அளவிலான பொருளாதார முதலிடுகளை செலவிடுவது என்பது சரியானதா என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பெரும் பின்னடைவில் போரிஸ் ஜான்சனின் Conservatives கட்சி: பரபரப்பூட்டும் பிரித்தானிய தேர்தல் முடிவுகள்!
மேலும், ரஷ்யாவின் எண்ணெய் வளங்களை தற்போது ஹங்கேரி 65 சதவிகிதம் வரை நம்பி இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்க விரும்பவில்லை, மாறாக ஒத்துழைப்பு தர விரும்புகிறோம், ஆனால் இவை அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகளை பொருத்தே அமையும் எனவும் Viktor Orban தெரிவித்துள்ளார்.