தவறுதலாக நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை சுட்ட கணவர்: குழந்தை பிறந்தபோது
ரஷ்யாவில் கணவர் ஒருவர் பறவைகளைச் சுடும் துப்பாக்கி ஒன்றால் சுடும்போது, மரம் ஒன்றில் பட்ட குண்டு ஒன்று, கர்ப்பிணியான அவரது மனைவியின் வயிற்றில் பாய்ந்துள்ளது.
தவறுதலாக கர்ப்பிணிப்பெண்ணை சுட்ட கணவர்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், தனது வீட்டுத் தோட்டத்தில் பறவைகளைச் சுடும் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி செய்துகொண்டிருந்திருக்கிறார் ஒருவர்.
அப்போது மரம் ஒன்றில் பட்ட குண்டு ஒன்று திசைமாறி அவரது மனைவி மீது பாய்ந்துள்ளது. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
Credit: Newsflash
குண்டு அவரது வயிற்றில் பாய, உடனடியாக மனைவியை அவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கும் எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள், தாயின் வயிற்றுக்குள் பாய்ந்த அந்த குண்டு, குழந்தையின் வயிற்றில் மேல் பரப்பில் சென்று பதிந்துள்ளதைக் கண்டுள்ளார்கள்.
Credit: Newsflash
குழந்தைக்கோ தாய்க்கோ அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்த மருத்துவர்கள், பிரசவத்தின்போது அந்த குண்டை அகற்றிக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்கள்.
குழந்தை பிறந்தபின்...
அதேபோல, அந்தப் பெண் அந்தக் குழந்தையை பிரசவித்தபின், குழந்தையின் வயிற்றிலிருந்த அந்த குண்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்கள்.
அந்த குண்டு குழந்தையின் வயிற்றின் மேல் அடுக்கிலேயே தங்கிவிட்டதால், அதன் உள்ளுறுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தாயும் சேயும் இப்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |