கணவன் மனைவியை அடிப்பது நியாமானது: 80 நாடுகளில் உள்ள 25 சதவீத மக்களின் தவறான எண்ணம்
கணவன் மனைவியை அடிப்பது நியாயமானது என 80 நாடுகளில் உள்ள 25 சதவீத மக்கள் நினைப்பதாக ஐக்கிய நாடுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து மறுக்கப்படும் பெண்களுக்கான சம உரிமை
பெண்களுக்கான சம உரிமை கல்வி முக்கியத்துவம் ஆகியவை குறித்து சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு கூட்டங்கள் ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டாலும் இன்னும் உலக அளவில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது நீடித்த வண்ணமே உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைகள் குறிப்பிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலக அளவில் 90 சதவீத ஆண் மற்றும் பெண் அல்லது 10ல் 9 ஆண் மற்றும் பெண்கள் ஏதாவது ஒரு வகையான பெண்களுக்கு எதிரான அடிப்படை சார்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
Representational Image
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள பாலின சமூக விதிமுறைகள் குறியீடு என்ற அறிக்கையில், 90 சதவீத மக்கள் பெண்களுக்கு எதிரான 7 அடிப்படை சார்புகளில் ஒன்றிலாவது நீடித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கணவன் மனைவியை அடிப்பது நியாயமானது
2010 முதல் 2014 வரை 2017 முதல் 2022 வரை 80 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி திட்டம் உலக மதிப்புகள் கணக்கெடுப்பில் , 85 சதவீத உலக மக்கள் தொகையில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் எத்தகைய முன்னேற்ற மாறுபாடுகளும் குறிப்பிடத்தக்க வகையில் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
Representational Image
அத்துடன் 65 சதவீத மக்கள், பெண்களை விட ஆண்கள் சிறப்பான அரசியல் தலைவர்களை உருவாக்குகின்றனர் என்றும் 40 சதவீத மக்கள் பெண்களை விட ஆண்கள் சிறந்த வணிக நிர்வாகிகள் என்று நம்புகின்றனர் என தெரிவித்துள்ளது.
மேலும் 80 நாடுகளில் உள்ள 25 சதவீத மக்கள் கணவன் மனைவியை அடிப்பது நியாயமானது என்ற நினைத்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.