மனைவியை சமாதானப்படுத்த முதலாளியின் ரூ.1 கோடி மதிப்புள்ள காரை திருடிச் சென்ற கணவன்
கோபமாக இருக்கும் மனைவியை சமாதானம் செய்வதற்காக முதலாளியின் ரூ.1 கோடி மதிப்புள்ள காரை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரை திருடிய நபர்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசிப்பவர் ராகேஷ் அகர்வால். இவரிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது.
இவரது வீட்டில் காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 17-ம் திகதி அன்று காலை காரை சுத்தம் செய்ய வேண்டும் என்று உரிமையாளரிடம் இருந்து துர்கேஷ் சாவியை கேட்டுள்ளார். அவரும், ஓட்டுநரை நம்பி சாவியை கொடுத்துள்ளார்.
அதன்பின்னர், காருடன் சேர்ந்து அவரையும் காணவில்லை. இதையடுத்து அவருக்கு போன் செய்தும் எடுக்காததால் கார் திருடப்பட்டதை உறுதி செய்தார்.
பின்பு, இது தொடர்பாக கார் உரிமையாளர் காவல் துறையில் புகார் கொடுத்தார். அதன்படி, காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் திருடப்பட்ட காரை 6 மணி நேரத்துக்குள் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
பின்னர், உரிமையாளரிடம் காரை ஒப்படைத்து ஓட்டுநரை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரிக்கும்போது, கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |