வளர்ந்து கொண்டே போகும் தலை: 29 ஆண்டுகளாக குழந்தை போன்று படுக்கையில்
பிரேசில் நாட்டில் தலை வளர்ந்துகொண்டே இருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸ் என்ற பெண்ணை அவரது தாயார் 29 வருடங்களாக குழந்தையை போல் கவனித்துக் கொள்கிறார்.
அரிய வகை நோய்
பிரேசில் நாட்டில் அடல்கிசா சோரெஸ் ஆல்வ்ஸ் என்ற தாயார் ஒருவருக்கு மூன்று மகள் உள்ள நிலையில், அதில் ஒருவரான மகள் கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸ் ஹைட்ரோகெபாலஸ் (hydrocephalus) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு, மூளையில் திரவம் ஒன்று சுரந்துகொண்டே இருக்கும் என்பதால் பாதிக்கப்பட்டோரின் தலை அபரிவிதமான வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸ் கருவில் இருக்கும் போதே இத்தகைய அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வருடங்கள் வரை மட்டுமே உயிர் வாழும் நிலையில், கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸ் தற்போது 29 வருடங்களை கடந்து தனது 30 வயதினை தொட உள்ளார்.
கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸ் 29 வருடங்களாக படுத்த படுக்கையாக மட்டுமே இருக்கிறார், அத்துடன் அவருக்கு கண்கள் தெரியாது, பேசவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தாயின் அரவணைப்பு
குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப்பெரிய வேளையாக மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய குழந்தை கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸை கிட்டத்தட்ட 29 வருடங்களாக பிறந்த குழந்தையை போலவே அவரது தாயார் அடல்கிசா சோரெஸ் ஆல்வ்ஸ் கவனித்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் பேசிய போது, பெரிய தலை கொண்ட குழந்தை என்று கிரேசிலியை அனைவரும் அழைக்கிறார்கள், அதை நான் தவறாக பார்க்கவில்லை, குழந்தை என்பதே மகிழ்ச்சியான வார்த்தை தான், இருப்பினும் சில சமயங்களில் வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.