சொந்தமாக என்னிடம் சைக்கிள் கூட இல்லை: பிரதமர் மோடி கூறும் தகவல்
சொந்தமாக என்னிடம் சைக்கிள் கூட இல்லை என்று இந்திய பிரதமர் மோடி விவசாயி ஒருவரிடம் பகிர்ந்துள்ளார்.
கட்சி விளம்பரங்கள்
அடுத்த ஆண்டு நாடாளுமண்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகள் அரசியல் பிரச்சார மேடைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்திய அரசினுடைய விவசாய கடன் அட்டை, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்களை மக்கள் நினைவுகூரும் வகையில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் விளம்பர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சைக்கிள் கூட இல்லை
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினர். அப்போது, ரங்பூர் கிராம சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்ற விவசாயி மோடியிடம் பேசினார்.
அவர், தான் விவசாய கடன் அட்டையைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதை பெருமையாக மோடியிடம் தெரிவித்தார்.
அதற்கு பிரதமர் மோடி, "உங்களிடம் சொந்தமாக டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சொந்தமாக சைக்கிள் கூட இல்லை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |