தோனிக்காக ஐபிஎல் கோப்பையை வெல்வேன்: சென்னையின் நட்சத்திர வீரர் சபதம்!
2023 ஐபிஎல் சீசனில் தோனிக்காவும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்காவும் கோப்பையை கைப்பற்ற தான் விரும்புவதாக சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம்
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், வரும் ஐபிஎல் தொடர் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கொச்சியில் வைத்து நடந்து முடிந்துள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன், நிக்கோலஸ் பூரன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
“It's been one year since we have won(the trophy) so it's been a long time ”
— YasH (@RutuEra) December 21, 2022
Mentality King????@Ruutu1331 pic.twitter.com/2Hf98a75jL
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சுமார் 16.25 கோடிக்கு எடுத்து அசத்தியுள்ளது. மேலும் சாம் குர்ரனை 18.50 கோடிக்கு பஞ்சாப் அணியும், கேமரூன் கிரீனை மும்பை அணி 17.50 கோடிக்கு ஏலத்தில் தட்டிச் சென்றனர்.
தோனிக்காக கோப்பையை வெல்வோம்
ஐபிஎல் ஏலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை கிளப்பி இருக்கும் நிலையில், சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து இருக்கும் கருத்து ஒன்று சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், 2023 ஐபிஎல் சீசனை கேப்டன் தோனிக்காவும், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்காவும் வெல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
Signed ✍️and Stamped?
— Chennai Super Kings (@ChennaiIPL) December 23, 2022
?Destination: 6️⃣0️⃣0️⃣0️⃣0️⃣5️⃣ ?#WhistlePodu #SuperAuction ?? pic.twitter.com/0jlafz9v1n
25 வயதான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், இவர் இதுவரை 36 போட்டிகளில் விளையாடி மொத்தம் 1207 ஓட்டங்கள் சென்னை அணிக்காக குவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு சீசனில் மட்டும் 635 ஓட்டங்கள் சென்னை அணிக்காக ருதுராஜ் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.