சினிமாவில் நடிப்பதற்காக பதவியை ராஜினாமா செய்த IAS அதிகாரி! யார் இவர்?
இந்திய மாநிலம், உத்தரப்பிரதேசத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது பணியை துறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இவர்?
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் என்பவர் 2011 -ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். இவர், 2015-ம் ஆண்டு வரை டெல்லி அரசு அதிகாரியாக பணியாற்றினார்.
பின்பு, 2018 -ம் ஆண்டிற்கு பிறகு உத்தரப்பிரேதேச மாநிலத்திற்கு வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2018 -ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து, குஜராத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பார்வையாளராக, இந்திய தேர்தல் ஆணையம் அபிஷேக் சிங்கை நியமித்திருந்தது.
ஆனால், இவருடைய பணிகள் திருப்தி அளிக்காததால், பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது எழுந்தது.
சினிமாவில் நடிக்க ஆசை
இதனையடுத்து, அபிஷேக் சிங்கை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அபிஷேக் சிங் தன்னுடைய ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, இவர் தன்னுடைய சினிமா கனவை நிறைவேற்றுவதற்காக தனது பணியை துறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அபிஷேக் சிங்கின் மனைவி துர்கா சக்தி நாக்பால் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |