ஐஸ்லாந்தின் எரிமலை வெடித்து 330 அடி உயரத்திற்கு பீறிட்டு பாய்ந்த குழம்பு
தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை பல வாரங்களாக நிலநடுக்கங்களுக்குப் பிறகு தற்போது வெடித்துள்ளது. அதன் குழம்பு 330 அடி உயரத்திற்கு பீறிட்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவின் விமான சேவைகள்
திங்கட்கிழமை மாலை, கிரிண்டாவிக் வடகிழக்கில் 2.5 மைல் தொலைவில் 3.5 கிலோமீற்றர் நீளமுள்ள பிளவுகளில் இருந்து எரிமலைக்குழம்பு வெளியேறத் தொடங்கியுள்ளது.
@epa
மீன்பிடி கிராமமான கிரிண்டாவிக்கிலிருந்து 1.6 மைல் தொலைவில் எரிமலைக்குழம்பு பாய்கிறது, இருப்பினும் அதிகாரிகள் அதிகம் கவலைப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இங்குள்ள 3,000 குடியிருப்பாளர்கள் கடந்த மாதம் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் 2010ல் ஏற்பட்டது போன்ற பாதிப்பு தற்போது இல்லை என்றும், அப்போது ஐரோப்பாவின் விமான சேவைகள் மொத்தமாக பாதிக்கப்பட்டது. தலைநகர் Reykjavik-ஐ சுற்றியுள்ள பகுதியில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்தே நிலநடுக்கம் அதிகரித்து காணப்பட்டது.
@ap
தற்போது எரிமலை வெடிப்பானது கிரிண்டாவிக்கின் வடகிழக்கில் சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஆனால் 42 கி.மீ தொலைவில் உள்ள Reykjavik பகுதியில் இருந்தே எரிமலை வெடிப்பை காண முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வினாடிக்கு 100 முதல் 200 கன மீற்றர்கள்
இதனிடையே எரிமலை வெடிப்பு பகுதியை விட்டு மக்கள் விலகி இருக்குமாறு பொலிசார் எச்சரித்துள்ளனர். எரிமலை வெடிப்பின் பிளவானது 3.5கி.மீ நீளமிருப்பதாக கூறுகின்றனர்.
@reuters
மேலும் எரிமலைக்குழம்பு வினாடிக்கு சுமார் 100 முதல் 200 கன மீற்றர்கள் வரை பாய்வதாக கூறப்படுகிறது. ஐஸ்லாந்தில் பல வாரங்களாக எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்ததால், முன்னெச்சரிக்கையாக கிரின்டாவிக் நகரை விட்டு வெளியேறுமாறு கடந்த மாதமே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
@ap
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |