டெல்லியின் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பிரபல தொழிலதிபர் கொடுத்த ஐடியா
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா யோசனை ஒன்றை கூறியுள்ளார்.
காற்று மாசு அதிகரிப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாள்களாகவே காற்றின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்துள்ளது.
குறிப்பாக, அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரித்தல், தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சுவாயுக்கள், வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது.
இதனால், காற்றின் தரம் மோசமாக இருப்பதால் இந்த நான்கு மாநிலங்களும் விவசாய கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனந்த் மஹிந்திரா கூறியது
இந்நிலையில், டெல்லியில் நிலவிவரும் காற்று மாசுபாடு குறித்து ஆனந்த் மஹிந்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில், "காற்றின் தரத்தை மோசமாவதற்கு காரணமான புற்களை எரிப்பதற்கு மாற்றாக "மீளுருவாக்க விவசாயம்" பயன்படுத்தப்பட வேண்டும்.
டெல்லியை மீட்டெடுக்க மீளுருவாக்கம் விவசாயத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இது மண்ணின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புல்வெளிகளை எரிப்பதற்கு ஒரு மாற்றையும் வழங்குகிறது.
To heal Delhi’s pollution, Regenerative Agriculture MUST be given a chance. It provides a remunerative alternative to stubble burning while simultaneously increasing soil productivity. @VikashAbraham of @naandi_india stands ready to help. Let’s do it!
— anand mahindra (@anandmahindra) November 7, 2023
pic.twitter.com/XvMPAghgdQ
இதற்கு உதவுவதற்காக நந்தி அறக்கட்டளையின் விகாஷ் ஆபிரகாம் தயாராக இருக்கிறார். அதனை செய்வோம்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |