காசாவின் உள்கட்டமைப்புகளை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம்: பிரபல நேட்டோ நாடு அறிவிப்பு
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு காசாவில் உள்ள உள்கட்டமைப்புகளை துருக்கி மீண்டும் கட்டிக் கொடுக்கும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் உள்ளதா?
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகளும் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வருமாறு இஸ்ரேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கெட்டும் வரை போர் நிறுத்தம் சாத்தியம் இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கு சவுதி அரேபியா, துருக்கி, போன்ற நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் அணு ஆயுதங்கள் எதுவும் வைத்துள்ளதா? என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காசாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்
அத்துடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடன் துருக்கியின் உள்கட்டமைப்புகளை துருக்கி மீண்டும் கட்டியெழுப்பும் என ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் உள்ள சேதமடைந்த பள்ளிகள், மருத்துவமனை, நீர் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை மீண்டும் துருக்கி கட்டியெழுப்பும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் வாக்குறுதி அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |