விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் விஷம் வைத்துவிடுவேன்- தவெக பெண் தொண்டர்
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக பெண் தொண்டர் ஒருவரிடம் செய்தியாளர் பேட்டி எடுத்தார்.
அவர் பேட்டியில், விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு விஷம் வைத்துவிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர், "ஈரோடு பிரச்சார கூட்டத்திற்கு விஜய்க்காக வந்தேன். இந்த முறை கண்டிப்பாக என் ஓட்டு விஜய்க்கு தான்.
விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கண்டிப்பாக இருக்கும், மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும், எங்கள் அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார்.
என் வீட்டில் 9 பேர் இருக்கிறார்கள், 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவார்கள், அப்படி போடவில்லை என்றால் சாப்பாட்டில் விஷம் தான்.
மேலும் அந்த பெண் தொண்டர், விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகருக்கு மாலைபோடுவதாக வேண்டியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |