என்னைக் கொன்றால் அந்த நாடே காணாமல் போய்விடும்: ட்ரம்ப் அதிரடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய பல முயற்சிகள் நடந்துள்ள நிலையில், அப்படி, தன்னைக் கொன்றால், அதற்குக் காரணமான நாடே இல்லாமல் போய்விடும் என்று கூறியுள்ளார் அவர்.
ட்ரம்பைக் கொல்ல முயற்சி
ட்ரம்பைக் கொலை செய்ய பல முறை முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அதன் பின்னணியில் ஈரான் இருப்பது தெரியவந்தது.
ஆப்கன் நாட்டவரான ஃபர்ஹான் ஷக்கேரி (Farhad Shakeri, 51) என்பவர், ஜோனதன் லோதோல்ட் ( Jonathan Loadholt, 36) மற்றும் கார்லைஸில் ரிவேரா Carlisle Rivera, 49) என்னும் இருவருடன் இணைந்து, ட்ரம்பைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
🚨 BREAKING: The DOJ unseals new criminals charges against an Iranian man for his thwarted plot to kill President Trump:
— Conservative War Machine (@WarMachineRR) November 8, 2024
"His name is Farhad Shakeri and he is accused of working with the Iran National Guard Corps to kill President-elect Donald Trump." pic.twitter.com/icpjgauF3Q
ஆனால், அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஷக்கேரி என்பவர், ஒரு குழந்தையாக அமெரிக்காவுக்குள் வந்தவர்.
கொள்ளைக் குற்றத்துக்காக 14 ஆண்டுகள் சிறையிலிருந்த ஷக்கேரி, சிறைத்தண்டனைக்குப் பின், 2008ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்டார்.
ஆனால், அதற்குப் பின் அவர் ஈரான் புரட்சிப்படையுடன் இணைந்ததாக கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு, ட்ரம்ப் உத்தரவின்பேரில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் ஒன்றில், ஈரான் புரட்சிப்படையின் தலைவராக இருந்த, ஈரான் தளபதியான காசேம் சுலைமானி கொலப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக ட்ரம்பைக் கொல்ல ஷக்கேரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Farhad Shakeri, the Iranian who led the plot to assassinate President Trump "participated in voluntary telephonic interviews with FBI agents"
— TheLobbyistGuy (@TheLobbyistGuy) November 8, 2024
Every. Single. Time. https://t.co/wVfu9Jul8Q pic.twitter.com/yDUZATYhnm
முதலில் அமெரிக்க பொதுத்தேர்தலுக்கு முன் ட்ரம்பைக் கொலை செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், பின்னர், ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெறமாட்டார் என ஈரான் தலைமை நினைத்ததால், கொலை முயற்சியை தள்ளிப்போட அறிவுறுத்தப்பட்டுள்ளார் ஷக்கேரி.
அதாவது, ட்ரம்ப் தேர்தலில் தோற்றுவிட்டால், அவர் அருகில் செல்வது எளிது, எளிதாக அவரைக் கொன்றுவிடலாம் என்பதால் ட்ரம்பைக் கொல்லும் முயற்சி தள்ளிப்போடப்பட்டுள்ளது.
அந்த நாடே இல்லாமல் போய்விடும்
இந்நிலையில், இந்த கொலை முயற்சி தொடர்பில் ட்ரம்பிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ஏற்கனவே அது தொடர்பில் தான் உத்தரவு பிறப்பித்துவிட்டதாக தெரிவித்தார்.
அதாவது, ஈரான் தன்னைக் கொலை செய்யுமானால், அதற்குப் பிறகு ஈரான் என்னும் நாடே இருக்காது.
ஈரானை முழுமையாக அழிக்கும் வகையில் ஆணை பிறப்பித்து அதில் தான் கையெழுத்தும் இட்டாயிற்று என்றார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |