2027-க்குள் இந்தியா உலகின் 3வது பாரிய பொருளாதாரமாக மாறும்: நிர்மலா சீதாராமன்
2027-28 நிதியாண்டில் உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், 2027-28 நிதியாண்டில் 5 Trillion Dollarக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.
இதனுடன், பழமைவாத மதிப்பீடுகளின்படி, 2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 30 Trillion Dollarகளை எட்டும் என்று சீதாராமன் கூறினார்.
Vibrant Gujarat Global Summitல் உரையாற்றிய சீதாராமன், "நாம் அதை அடைவது சாத்தியம். 2027-28-ஆம் ஆண்டிற்குள் நாம் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக இருப்போம், அந்த நேரத்தில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் டாலர்களை தாண்டும். 2047ஆம் ஆண்டிற்குள் நமது பொருளாதாரம் குறைந்தது 3 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்பது ஒரு பழமைவாத மதிப்பீடு." என்று கூறினார்.
தற்போது 5வது பாரிய பொருளாதாரம்
தற்போது, சுமார் 3.4 டிரில்லியன் டொலர் ஜிடிபியுடன் இந்தியா உலகின் ஐந்தாவது பாரிய பொருளாதாரமாக உள்ளது.
தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜேர்மனி ஆகிய நாடுகள் இதில் முன்னணியில் உள்ளன.
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருந்தது.
2023ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் 919 பில்லியன் டொலர் அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது என்று சீதாராமன் தெரிவித்தார்.
வங்கிக் கணக்குகள் அதிகரிப்பு
இதில், 65 சதவீதம் அதாவது 595 பில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 8-9 ஆண்டுகளில் வந்துள்ளது.
2014-ல் 15 கோடி பேர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்த நிலையில், நிதிச் சேர்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் எதிர்ப்பு., தயவுசெய்து சுற்றுலாப் பயணிகளை அனுப்புங்கள்: மாலத்தீவு அதிபர் சீனாவிடம் கோரிக்கை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Finance minister Nirmala Sitharaman, India can become world's third-largest economy by 2027-2028