இந்தியா மேற்கொள்ளவிருக்கும் Cold Start பயிற்சி: ட்ரோன்கள், ட்ரோன் எதிரிப்பு திறன்கள் சோதனை
இந்தியா தனது ட்ரோன்கள், ட்ரோன் எதிரிப்பு (Counter-UAS) திறன்களை பரிசோதிக்க Cold Start எனும் முக்கிய இராணுவ பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.
இப்பயிற்சி அக்டோபர் 6 முதல் 10-ஆம் திகதி வரை மத்திய பிரதேசத்தில் நடத்தப்படுகிறது.
Headquarters Integrated Defence Staff (HQ IDS) தலைமையில் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில், இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்கின்றன.
மேலும், தொழில்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் இதில் இணைகின்றன.
இந்தியாவின் வான் பாதுகாப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
HQ IDS-வின் துணைத்தலைவர் Air Marshal ராகேஷ் சின்ஹா, "இது எதிரிகளின் ட்ரோன் தாக்குதல்களை தடுக்க வலுவான பாதுகாப்பே அமைப்பை உருவாகும் முயற்சி" என கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு டெல்லில் நடைபெற்ற "Counter UAVs & Air Defence Systems: The Future of Modern Warfare" மாநாட்டில் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில், ஆபரேஷன் சிந்தூரில் கிடைத்த பாடங்கள் மற்றும் எதிர்கால போர் சூழ்நிலைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "எதிர்கால போர்கள் ஆயுதங்களின் போராக மட்டும் இருக்காது,தொழில்நுட்பம், உளவுத்துறை, பொருளாதாரம் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளையாட்டாக இருக்கும்" என கூறினார்.
இந்த பயிற்சி இந்திய இராணுவத்தின் எதிர்கால போர் தயாரிப்பில் ஒரு முக்கிய கட்டமாகவும், ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க இந்தியாவின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indias Cold Start Drill, India Drone warfare technology, Indias Drone technology