இறுக்கமான உறவு... மாலத்தீவில் இருந்து முழுமையாக வெளியேறிய இந்திய ராணுவம்
மாலத்தீவில் நிறுத்தப்பட்டிருந்த கடைசி ராணுவத்தினரையும் இறுதியில் இந்தியா வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா நடவடிக்கை
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை வெளிற்றும் கடைசி நாள் நெருங்கிய நிலையில், இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுடனான உறவுகளை குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்த சீனா சார்பு ஜனாதிபதி முகமது முய்ஸு தேர்தலில் வென்று கடந்த ஆண்டு பதவியேற்றார்.
அதன் பின்னர் அவரது முடிவுகள் அனைத்தும் சீனாவை சார்ந்தே இருந்துள்ளது. ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததும், மாலத்தீவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக செயல்பட்டு வந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இந்த நிலையில், 27 இந்திய துருப்புக்களைக் கொண்ட மூன்றாவது மற்றும் இறுதிக் குழு வெள்ளிக்கிழமை மாலத்தீவை விட்டு வெளியேறியது. செவ்வாய்க்கிழமை 51 ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆனால் இந்திய ராணுவம் வெளியேறும் இந்த விவகாரத்தில் எவ்வித பொது நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |