இந்தியாவில் ஒலிம்பிக் நடைபெற்றால் இந்த நகரத்தில் தான் - ஆனால் 3 சிக்கல்கள்
இந்தியாவில் ஒலிம்பிக் நடத்தும் நகரை இந்திய ஒலிம்பிக் அமைப்பு உறுதி செய்துள்ளது.
2036 ஒலிம்பிக்
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியானது, உலகளவில் பெரிய விளையாட்டு திருவிழாவாகும். கடந்த 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது.
2028 ஒலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032 ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடக்க உள்ளது.
2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த, கத்தார், சவுதி அரேபியா, மெக்சிகோ, இந்தோனேசியா, துருக்கி, போலந்து, எகிப்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியாவும், 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியாவும் விருப்பம் தெரிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2036ம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற லட்சியத்தை அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து , 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து, இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், Olympic Committee’s Future Host Commission-க்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளது.
அகமதாபாத்
போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில், யோகா, கோகோ, கபடி, T20 கிரிக்கெட், செஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளைச் சேர்க்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.
இந்தியா ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குவோம் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அறிவித்தார்.
இதற்காக, இதுவரை எந்த நாடும் ஒலிம்பிக்கிற்கு செலவிடாத வகையில், 7.5 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.64,000 கோடி) ஒதுக்க உள்ளது.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகத்திற்கு சென்ற இந்திய குழு, இந்தியாவில் ஒலிம்பிக் நடத்தப்படும் நகரம் அகமதாபாத் என உறுதிப்படுத்தியுள்ளது.
3 கவலைகள்
அதேவேளையில், இந்தியா ஒலிம்பிக் நடத்துவது தொடர்பில் IOC மூன்று கவலைகளை தெரிவித்துள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்குள் (IOA) உள்ள நிர்வாக சிக்கல்கள் இந்தியாவின் முயற்சியை கணிசமாக பாதித்துள்ளன. நிதி சரியாக கையாளப்படாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ளது.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA), இந்தியாவை அதிக எண்ணிக்கையிலான ஊக்கமருந்து மீறல்கள் மற்றும் நேர்மறை சோதனை விகிதங்களைக் கொண்ட ஒரு நாடாக அடையாளம் கண்டுள்ளது. இதனை சரி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பெரிய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் அதன் செயல்திறன் கணிசமாக பலவீனமாகவே இருந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம் கூட வெல்லவில்லை. 7 பதக்கங்களுடன் இந்தியா 71வது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |