இந்தியாவிற்கு 5 சதவீதம் தள்ளுபடியில் கச்சா எண்ணெய் - ரஷ்யா அறிவிப்பு
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிக்கு மத்தியில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 5 சதவீதம் தள்ளுபடியை ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா, இந்தியாவிற்கு கச்ச எண்ணெய் விற்பனையில் 5 சதாவீதம் தள்ளுபடி வழங்கும் முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்கள் மற்றும் உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக ஏற்பட்ட சர்வதேச அரசியல் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், இரு நாடுகளும் தங்கள் எண்ணெய் வணிகத்தை தொடர முடிவு செய்துள்ளன.
ரஷ்யாவின் இந்திய வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா, இந்த தள்ளுபடி வணிக பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் பொதுவாக 5 சதவீதம் ஏறக்குறைய மாறுபடும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் துணை தூதர் ரோமன் பாபுஷ்கின், இந்தியா-ரஷ்யா உறவுகள் மீது நம்பிக்கை இருப்பதாகவும், வெளி அழுத்தங்கள் இருந்தாலும் எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா இப்போது இந்தியா மீது 50 சதவீதம் சுங்க வரி விதித்து, ரஷ்யாவிடமிருந்துஹ் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு நிதி வழங்குவதாக இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், இந்தியா இந்த வரி நடவடிக்கை நியாயமற்றது என்றும் காரணமற்றது என்றும் கண்டனம் தெறிவித்துள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ருஸ்சிவிற்கு இரண்டாம் நிலை அழுத்தம் கொடுக்கவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த சுங்க வரிகளை விதித்துள்ளதாக, அவரது செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுபோன்ற பொருளாதார அழுத்தங்களால் இந்தியா பின்னடைவதில்லை என இந்திய பிரதமர் மோடி உறுதியாக கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தியா-ரஷ்யா உறவுகள் வணிக மற்றும் அரசியல் ரீதியாக பலவீனமின்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia India oil deal, 5 percent crude oil discount, Trump India tariffs, US sanctions on India, India Russia energy ties, Ukraine war oil trade, Russian crude to India