2026-க்குள் தங்கம் விலை ரூ.1,25,000 வரை உயரும்: அறிக்கை
2026-க்குள் தங்கம் விலை ரூ.1,25,000 வரை உயரும் என புதிய அறிக்கை கூறுகிறது.
ICICI வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி குழு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் தங்கத்தின் விலை 2026-ஆம் ஆண்டுக்குள் 10 கிராம் ரூ.1,25,000 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025-ல் உலகளவில் தங்கத்தின் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணங்கள்
அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார நிலைமை குறித்து நிறுவனங்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.
அமெரிக்க டொலரிலிருந்து மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் வேறு சொத்துக்களுக்கு மாறும் போக்கு அதிகரித்துள்ளது.
விலை மேலும் உயரும்
இந்த ஆண்டின் (2025) மீதமுள்ள காலத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,400 முதல் 3,600 அமெரிக்க டொலர் வரை விலை பெரும் என கணிக்கப்படுகிறது.
2026 முதல் பாதியில் ஒரு அவுன்ஸ் 3,600 முதல் 3,800 வரை உயரக்கூடும்.
புவியியல் அரசியல் பதற்றங்கள் அதிகரித்தால், விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இந்திய ரூபாய், அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது ரூ.89-ரூ.37 வரம்பை விட அதிகமாக வீழ்ச்சி அடைந்தால், இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த அறிக்கையின்படி, தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக தொடர்ந்து விலை உயர்வை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |