காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் 45 நிமிடங்கள் காரில் உரையாடியது உலக அரங்கில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மோடி - புடின் சந்திப்பு
சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சந்தித்துக் கொண்டனர்.
After the proceedings at the SCO Summit venue, President Putin and I travelled together to the venue of our bilateral meeting. Conversations with him are always insightful. pic.twitter.com/oYZVGDLxtc
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
இருநாட்டு தலைவர்களும் புடின் காரில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் உரையாடினர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சந்திப்புக்கு பிறகு, மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தில், “புடின் உடனான உரையாடல் எப்போதும் பயனுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து புடின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட பதிவில், அவர்கள் வீட்டில் இருப்பது போல் உணர்ந்ததால், இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
Had an excellent meeting with President Putin on the sidelines of the SCO Summit in Tianjin. Discussed ways to deepen bilateral cooperation in all sectors, including trade, fertilisers, space, security and culture. We exchanged views on regional and global developments, including… pic.twitter.com/DhTyqOysbf
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
இரு நாட்டு தலைவர்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நேரடி மற்றும் மறைமுக அழுத்தத்திற்கு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதை கண்டித்து அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது 50% வரி விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |