ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாகும் இந்தியா! வலியுறுத்திய பிரிட்டன்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்க பிரதிநிதி நாட்டை நிரந்தர உறுப்பினர்களாக இணைக்கும் வகையில் கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஜூலை மாதத்தில் இருந்து பிரிட்டன் தலைமை பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இந்தியா உள்பட்ட நாடுகள் முக்கியம் என வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத்திற்கான திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பிரிட்டன் தூதர் பார்பரா உட்வர்ட் பேசியதாவது:
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்க நாட்டை நிரந்தர உறுப்பினர்களாக இணைக்கும் வகையில் கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
wikipedia
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பிரிட்டன் தலைமை வகித்திருக்கும் நிலையில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பிரிட்டனின் இந்த வலியுறுத்தலுக்கு என்ன காரணம் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பார்பரா உட்வர்ட்,"பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்குவதன் மூலம் விரிவான புவியியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும். அதுமட்டுமில்லாமல், கவுன்சிலில் புவிசார் சமநிலையை உருவாக்க முடியும்" என்று கூறினார்.
இதனிடையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், 21 ஆம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்றவாறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |