ஆப்கானிஸ்தானுக்கு 20,000 மெட்ரிக் டன் கோதுமை: உதவிகரம் நீட்டும் இந்தியா
ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்படும் என இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
20, 000 மெட்ரிக் டன் கோதுமை
2021-ல் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, கடுமையான உணவு நெருக்கடியை அந்த நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு புதிய தவணையாக 20,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்குவதாக இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
AFP
ஐ.நா உலக உணவு திட்டத்துடன் இணைந்து இந்தியா போரால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கோதுமை உதவியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா மற்றும் மத்திய ஆசிய கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக உணவு நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா 50,000 மெட்ரிக் டன் உணவு தானியத்தை பாகிஸ்தானின் வழியாக அனுப்பியது.
Chabahar port
பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த கூடாது
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் மண்ணை எந்தவித பயங்கரவாதச் செயல்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.