பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கும் இந்தியா: ரூ.3100 கோடி ஒப்பந்தத்தின் இறுதி கட்டம்
இந்தியா இறுதி கட்ட பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு வழங்கவுள்ளது.
இந்தியா, பிலிப்பைன்ஸுடன் 2022-ல் கையெழுத்திட்ட ரூ.3100 கோடி (375 மில்லியன்) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட BrahMos ஏவுகணைகளை வழங்க தயாராகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிலிப்பைன்ஸ் இந்தியாவிலிருந்து BrahMos ஏவுகணைகளை வாங்கும் முதல் நாடாக மாறியுள்ளது.
BrahMos Aerospace நிறுவனத்தின் CEO ஜெய்தீர்த்த ஜோஷி, "ஏவுகணைகள் தயாராக உள்ளன. திட்டமிட்ட நேரத்தில் வழங்கப்படும்" என கூறியுள்ளார்.
ஒப்பந்தத்தின் கீழ் 290 கி.மீ. தூரம் மற்றும் Mach 2.8 வேகத்துடன் செயல்படும் மூன்று ஏவுகணை பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.
முதல் கட்ட ஏவுகணைகள் 2024-ல் வழங்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் கடற்படையில் ஏற்கெனெவே சேர்க்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Philippines BrahMos missile deal, BrahMos final delivery 2025, India defense exports Philippines, Philippines buys BrahMos from India, BrahMos missile batteries Philippines