சுவிஸ்-இந்தியா அறிவியல், தொழில்நுட்ப துறையில் கூட்டுறவை வலுப்படுத்த ஒப்புதல்
சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதாக மீண்டும் உறுதியளித்துள்ளன.
நேற்று (செப் 1) பெர்ன் நகரில் நடைபெற்ற 7-வது இந்தியா-சுவிட்சர்லாந்து இணை குழு கூட்டத்தில், இரு நாடுகளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளது.
இந்தக் கூட்டம் 2003-ல் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்றது.
இரு தரப்பும் தற்போதுள்ள ஆதரவு கருவிகளை சிறப்பாக பயன்படுத்துவது மேட்டரும் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
அடுத்த கூட்டம் 2027-ல் இந்தியாவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து பெங்களுருவில் Swissnex எனும் அலுவலகத்தை நடத்திவருகிறது. இது கல்வி ஆராய்ச்சி மற்றும் புதுமை துறைகளை இணைக்கும் பணியை செய்கிறது.
Swiss National Science Foundation மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து 2016-ஆம் ஆண்டு முதல் 300-க்கும் மேற்பட்ட இருதரப்பு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளித்துள்ளன.
Zurich University of Applied Science (ZHAW) தெற்காசியாவிற்கான முக்கிய அறிவியல் மையமாக செயல்படுகிறது.
1961-ஆம் ஆண்டு முதல் 370-க்கும் மேற்பட்ட Swiss Government Excellence Scholarship-கள் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டுறவு, இந்தியா-சுவிட்சர்லாந்து இடையேயான அறிவியல் மற்றும் கல்வி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுறது. இது இரு நாடுகளுக்கும் நீண்ட கால நன்மைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Switzerland research partnership, Indo-Swiss science agreement 2025, Swissnex Bengaluru innovation, Swiss scholarships for Indian researchers, ZHAW South Asia science hub, Indo-Swiss Joint Committee 2025, India Switzerland innovation summit, Swiss National Science Foundation India