முதலிடத்தில் தமிழக உணவு.., 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல்
இந்தியாவின் பிரபலமான பல உணவு வகைகள் உலகளவில் தனித்துவமாக்குகிறது.
இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான இட்லி தான் முதலிடத்தில் உள்ளது.

இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் Pornstar Martini உள்ளது. இது மிகவும் பிரபலமான மற்றும் நவீனமான ஒரு காக்டெய்ல் ஆகும்.
இதனைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் மிகவும் பிரபலமான உணவான Modak / Ukadiche Modak உள்ளது.
நான்காவது இடத்தில் Thekua உள்ளது. இது வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.

பின்னர் ஐந்தாவது இடத்தில் உகாதி பச்சடி உள்ளது. இது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களின் ஒரு பாரம்பரிய பிரசாதமாகும்.
இதற்கடுத்து ஆறாவது இடத்தில் பீட்ரூட் கஞ்சியும், ஏழாவது இடத்தில் திருவாதிரை களி உள்ளது. திருவாதிரை களி மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருநாளன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் பிரசாதமாகும்.

அடுத்து எட்டாவது இடத்தில் Yorkshire Pudding உள்ளது. இது இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய உணவு வகையாகும்.
இறுதியாக ஒன்பதாவது இடத்தில் கோந்து கட்டிராவும், பத்தாவது இடத்தில் தென்னிந்தியாவின் மிக பிரபலமான உணவுகளில் ஒன்றான கொழுக்கட்டை உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |