உக்ரைனின் மிகப்பாரிய டீசல் சப்ளையராக மாறிய இந்தியா!
இந்தியா உக்ரைனின் மிகப்பாரிய டீசல் சப்ளையராக மாறியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பை எதிரிகொண்டுள்ள நிலையில், உக்ரைனுக்கு மிகப்பாரிய டீசல் வழங்கும் நாடாக இந்தியா சத்தமில்லாமல் மாறியுள்ளது.
2025 ஜூலையில், உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் 15.5 சதவீதத்தை இந்தியா வழங்கியுள்ளது.
தினசரி சுமார் 2,700 டன் டீசல் அனுப்பப்பட்டு, இந்த மாதம் இந்தியாவின் மிகச் சிறந்த ஏற்றுமதி காலமாக அமைந்தது.
2024-ல் 1.9 சதவீதமாக மட்டுமே இருந்த இந்தியாவின் பங்கு, 2025-ல் 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த டீசல் ரோமானியாவின் Danube வழியாகவும் , துருக்கியில் உள்ள Opet Terminal வழியாகவும் உக்ரைனுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுக்கு டீசல் வழங்கும் மற்ற முக்கியமான நாடுகளாக ஸ்லோவாகிய (15%), கிரீஸ் (13.5%), துருக்கி (12.4%) மற்றும் லிதுவேனியா (11.4%) உள்ளன. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவின் இந்த டீசல் ஏற்றுமதி, உலக அரசியல் மற்றும் வர்த்தகத்தில் புதிய பரிணாமங்களை உருவாக்கி வருகிறது. இது இந்தியாவின் எரிபொருள் சுத்திகரிப்பு திறனையும், உலக சந்தையில் அதன் தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட டீசல் ரஷ்யாவின் கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அனால், அதற்கு அதிகாரபூர்வ ஆதாரங்கள் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Ukraine diesel trade, Russian crude US tariffs, India fuel exports 2025, Ukraine diesel imports July, HAL refinery Russian oil, Danube diesel shipments, Opet terminal fuel route, India vs US trade tensions, Global oil politics India