இந்தியாவின் முதல் மைக்ரோசிப் விக்ரம்-32 வெளியீடு
இந்தியா தனது முதல் உள்நாட்டு தயாரிப்பு மைக்ரோசிப்பை வெளியிட்டுள்ளது.
Semicon India 2025 மாநாட்டில் இன்று, Vikram-32 எனும் முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் 32-Bit Processor அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மைக்ரோசிப்பை பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ வழங்கினார்.
இந்த சிப் இந்திய விண்வெளி ஆய்வு நிருவனத்துடன் (ISRO) இணைந்து Semiconductor Laboratory (SCL) மூலம் உருவாக்கப்பட்டது.
இது 32 பிட் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டு, decimal கணக்கீடுகள் மற்றும் Satellite launch போன்ற சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது.
Vikram-32 சிப் PSLV-C60 விண்வெளி பயணத்தில் சோதிக்கப்பட்டு அதன் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டது.
இது பஞ்சாப், மொகாலியில் உள்ள SCL உற்பத்தி நிலையத்தில் 180nm CMOS தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சிப் மிகக் கடுமையான சூழ்நிலைகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், விண்வெளி பாதுகாப்பு, விமானம், வாகனங்கள் மற்றும் ஆற்றல் துறைகளிலும் பயன்படுத்தக்கூடியது.
இது இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், உலகலவியாளவில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் ஒரு அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Vikram-32 chip, ISRO microprocessor, India semiconductor mission, indigenous chip India, Semicon India 2025, Vikram-32 processor features, Ashwini Vaishnaw chip launch, PM Modi Vikram chip, SCL Mohali chip, India space chip technology