இந்திய இளம் ராணுவ வீரர் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்
காஷ்மீரின் குல்காமில் இளம் ராணுவ வீரர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
25 வயதுடைய இராணுவ வீரர் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தபோது அவரது வாகனத்தில் இருந்து கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஜாவேத் அகமது (Rifleman) லே (லடாக்) பகுதியில் பணியமர்த்தப்பட்டதாகவும், சனிக்கிழமை இரவு 8 மணியளவில் காணாமல் போனதாகவும் அறிக்கை கூறுகிறது.
NDTV
கடத்தப்பட்ட ராணுவ வீரரை கண்டுபிடிக்க இந்திய ராணுவம் மற்றும் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஜாவேத் தனது காரில் சவுவால்காமுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் வீடு திரும்பாததையடுத்து, குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களிலும் தேடினர்.
சோதனையின் போது, பரன்ஹால் கிராமத்தில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. காரில் ஒரு ஜோடி செருப்புகள் மற்றும் இரத்தக் கறைகள் காணப்பட்டன. காரின் கதவுகள் திறந்தபடி இருந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Kashmir Soldier Missing, Indian Army Jawan Missing, Rifleman Javed Ahmad