உலகம் சுற்ற மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட இளைஞர்: பிரித்தானியாவில் கிடைத்த அதிர்ச்சி
உலகம் சுற்ற மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட இந்திய இளைஞர் ஒருவருக்கு பிரித்தானியாவில் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
இந்திய இளைஞருக்கு பிரித்தானியாவில் கிடைத்த அதிர்ச்சி
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த யோகேஷ் (Yogesh Alekari, 33), மே மாதம் தனது மோட்டார் சைக்கிளில் உலகம் சுற்றப் புறப்பட்டார்.
17 நாடுகளைக் கடந்து இங்கிலாந்துக்கு வந்த யோகேஷுக்கு, அங்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
ஆகத்து மாதம் 28ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காமில் பெய்டு பார்க்கிங் ஒன்றில் தனது மோட்டார் சைக்கிளை பார்க் செய்துவிட்டு காலை உணவு உண்பதற்காக சென்றுள்ளார் யோகேஷ்.
திரும்பி வந்து பார்க்கும்போது, தனது மோட்டார் சைக்கிளைக் காணாமல் அதிர்ந்துபோயுள்ளார் யோகேஷ்.
அத்துடன், அவரது லாப்டாப், கமெரா, பாஸ்போர்ட், பணம், கிரெடிட் கார்டு ஆகியவை வைத்திருந்த பையையும் காணவில்லை.
மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் குறித்து ஆதாரம் கிடைத்தும் பிரித்தானிய பொலிசார் சரியான வகையில் உதவி செய்யாத நிலையில், தற்காலிக பயண ஆவணங்கள் பெறுவதற்காக லண்டனிலுள்ள இந்திய உயர் ஆணையத்தை அணுகியுள்ளார் யோகேஷ். அவர் விரைவாக பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டாகவேண்டும்.
ஆக, அடுத்து ஆப்பிரிக்கா செல்லும் ஆசையிலிருந்த யோகேஷின் உலகம் சுற்றும் திட்டம், தற்போதைக்கு தடைபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |