துபாயில் எளிமையாக பேருந்தில் பயணித்த இந்திய கோடீஸ்வரர்: வியக்கும் இணையம்
இந்திய கோடீஸ்வரர் ஒருவர் எளிமையாக பேருந்து ஒன்றில் பயணிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
பேருந்தில் பயணித்த இந்திய கோடீஸ்வரர்

Lulu குழுமத்தின் தலைவரான MA யூசுஃப் அலி (MA Yusuff Ali), இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூரில் பிறந்தவர் ஆவார்.

தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபியில் வாழ்ந்துவருகிறார் யூசுஃப் அலி.
சமீபத்தில் துபாயில் யூசுஃப் அலி பேருந்து ஒன்றில் பயணிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன. அவர், எளிமையாக, சர்வசாதாரணமாக பேருந்தில் ஏறி, அதன் சாரதியிடம் கைகுலுக்கிவிட்டு, எப்படி இருக்கிறீர்கள் என்றும் கேட்டுவிட்டுச் செல்வதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
பாதுகாவலர்கள் சூழ, ஆடம்பர கார்களில் பயணிக்கும் கோடீஸ்வரர்களைக் கண்டு பழகிப்போன மக்கள், பேருந்தில் பயணிக்கும் கோடீஸ்வரரான யூசுஃப் அலியின் எளிமையைக் கண்டு வியக்கிறார்கள்.
வளைகுடா பகுதி மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான யூசுஃப் அலியின் சொத்து மதிப்பு 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் அது 18,20,20,66,40,000.00 ரூபாய் ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |