ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம்! இந்தியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தல்
நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் இந்தியர்களை அங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி கைது
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. ஜனாதிபதி முகமது பாசுமின் ஆட்சியை கவிழ்த்து அவரை கைது செய்துள்ளது அந்நாட்டு இராணுவம்.
இதனால் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்திய அரசு நைஜரை விட்டு உடனடியாக வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
AP
இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் Arindam Bagchi கூறுகையில், 'நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
சுமார் 250க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அந்நாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
File/ANI
இதற்கிடையில், இராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என நைஜர் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |