இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு தடை! பிரபல ஐரோப்பிய நாட்டில் பரவிய பயங்கர வைரஸ்
இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு தடை விதித்த பிரபல ஐரோப்பிய நாட்டில், இரண்டு பேருக்கு இந்திய வகை கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.
இத்தாலியின் வடகிழக்கு வெனிஸிலிருந்து, 65 கிலோமீட்டர் தொலைவில் Vicenza மாநிலத்தில் அமைந்துள்ளது பஸ்ஸானோ நகரம்.
இந்த நகரத்தில் நேற்று (திங்கட்கிழமை) அப்பா மற்றும் மகள் இருவருக்கு, இந்தியாவில் பயங்கரமாக பரவிவரும் இரட்டை மரபணு உருமாற்றம் அடைந்த வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதும், சமீபத்தில் அவர்கள் இந்தியாவுக்கு பயணித்து இத்தாலிக்கு திரும்பியவர்கள் என்பதும் தெரியவந்தது.
அப்பா-மகள் இருவரும் தற்போது தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பிரான்ஸா (Roberto Speranza) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய பயணக் கட்டுப்பாட்டை அறிவித்திருந்தார். அதில், கடந்த 14 நாட்களில் இந்தியாவில் இருந்தவர்கள் யாரும் இத்தாலிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக கடந்த மாதம் Tuscany பிராந்தியத்தில் ஒருவருக்கு இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.