துப்பாக்கி வடிவிலான லைட்டரை காட்டி மிரட்டிய இந்தியர்: பாங்காக்கில் பொதுமக்கள் பீதி
பாங்காக்கில் துப்பாக்கி வடிவிலான லைட்டரை காட்டி இந்தியர் ஒருவர் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
இந்தியர் ஏற்படுத்திய பரபரப்பு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் திங்கட்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் சியாம் சதுக்கம் சோய் 6 பகுதியில் 41 வயது சஹில் ராம் தாதானி என்ற இந்தியர் துப்பாக்கி வடிவிலான லைட்டரை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தவே சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்தனர்.
சஹில் ராம் தாதானி முதலில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராகவும் துப்பாக்கி போன்ற பொருளை காட்டி மிரட்டவே, இறுதியில் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அத்துடன் அவரிடம் இருந்த துப்பாக்கி போன்ற சிகரெட் லைட்டரை பறிமுதல் செய்தனர்.
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு
காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தாதானி மீது மிரட்டல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் கஞ்சா போன்ற போதைப்பொருளை உட்கொண்டதால் இந்த ஒழுங்கற்ற வேலையில் இறங்கி இருப்பதாக நம்புகிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்./// இந்த அச்சுறுத்தல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |