அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை: 2 சிறுவர்கள் உயிரிழப்பு
அமெரிக்காவில் குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கட்டுமான நிர்வாகிக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி நபருக்கு சிறைத்தண்டனை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கட்டுமான நிர்வாகி அமந்தீப் சிங், இரண்டு இளம் டென்னிஸ் வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு கொடூரமான விபத்துக்காக 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
36 வயதான சிங், 2023 மே மாதம் குடிபோதையிலும், கொக்கைன் போதையிலும் 65 கிமீ வேக வரம்பு (40 mph) கொண்ட பகுதியில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் (சுமார் 93 மைல்கள்) வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.
இந்த விபத்தின் போது அவரது டாட்ஜ் ராம் டிரக் (Dodge Ram truck) 4 இளைஞர்களை ஏற்றிச் சென்ற ஆல்பா ரோமியோவுடன்(Alfa Romeo) நேருக்கு நேர் மோதியது.
இதில் 14 வயது ஈதன் பால்கோவிட்ஸ்(Ethan Falkowit) மற்றும் ட்ரூ ஹாசன்பீன்(Drew Hassenbein) ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
குறைந்தப்பட்ச தண்டனை
லாங் ஐலாண்டில்(Long Island) உள்ள மைன்யோலாவில்(Mineola) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தண்டனையில், அமந்தீப் சிங்கிற்கு குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டனை விதித்த நீதிபதி Helene Gugerty, சிங் பரோலுக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு குறைந்தபட்ச தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சிறையில் அவரது நடத்தை பரோல் பரிசீலனையில் ஒரு காரணியாக இருக்கும், மேலும் பரோல் மறுக்கப்பட்டால், அவரது தண்டனை முழு 25 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |