ஹார்ட் டிஸ்கில் 13,000 வீடியோக்கள்., குழந்தைகள், பெண்களை துஷ்பிரயோகம் செய்த இந்திய வைத்தியர் கைது
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த இந்திய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதான மருத்துவர் ஒமர் அய்ஜாஸை (Oumair Aejaz) அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார். ரூ.60 கோடி) பிணையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களின் நிர்வாண வீடியோக்களை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரிடம் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் மற்றும் படங்கள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஒமர் அய்ஜாஸ் ஆகஸ்ட் 8 அன்று கைது செய்யப்பட்டார்.
குளியலறைகள், உடை மாற்றும் பகுதிகள், வைத்தியசாலை அறைகள் மற்றும் வீட்டில் உள்ள கழிப்பறைகளில் கமெராக்கள் பொருத்தப்பட்டு வீடியோக்கள் மற்றும் படங்கள் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மனைவி சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பொலிசாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மயக்கத்தில் இருக்கும் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தின் ஓக்லாண்ட் கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் ஹில்ஸ் உள்ள அவரது வீட்டில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து அய்ஜாஸ் வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், அங்கிருந்து கணினிகள், தொலைபேசிகள் மற்றும் 15 வெளிப்புற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது ஹார்ட் டிஸ்கில் சுமார் 13,000 வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வீடியோக்கள் கிளவுட் ஸ்டோரேஜிலும் பதிவேற்றப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து 2011-ஆம் ஆண்டில் வேலை வீசாவில் அமெரிக்கா சென்ற ஏஜாஸ், பல்வேறு வைத்தியசாலைகளில் பணிபுரிந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |