ஈரானிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அவசர செய்தி
ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈரானிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி
ஈரானில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் அதிகரித்துவரும் நிலையில், ஈரான் தலைநகரான டெஹ்ரானில் அமைந்துள்ள இந்திய தூதரகம், ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக எந்த வகையிலாவது ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Credit : Reuters
இந்தியக் குடிமக்கள், கவனத்துடன் செயல்படவும், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களைத் தவிர்க்குமாறும், இந்திய தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறும், நடப்பவற்றை உள்ளூர் செய்திகள்மூலம் தெரிந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தியர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டைகள், பாஸ்போர்ட் முதலான ஆவணங்கள் மற்றும் பயண ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறும், இந்த விடயங்கள் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை அணுகுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |