இதுவரை 388 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தல்: இன்னும் காவலில் உள்ளவர்களின் எண்ணிக்கை?
கடந்த ஜனவரி மாதம் முதல், அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் பணியைத் தொடங்கினார்.
அதன்படி மெக்சிகோ, கனடா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை வெளியேற்றி வருகிறது.
அமெரிக்க இராணுவ விமானங்கள் மூலம் இந்தியர்கள் பலர் நாடு கடத்தப்பட்டனர்.
295 இந்தியர்கள் காவலில்
இந்த நிலையில், இந்திய அரசு ஜனவரி மாதம் முதல் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதிவில், "கடந்த பிப்ரவரி மாதம் 333 பேர் நேரடியாக, 3 இராணுவ விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பனாமா வழியாக 55 இந்தியர்களை வணிக விமானங்கள் மூலம் அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.
மேலும், 295 இந்தியர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளனர்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |