வெளிநாட்டில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்... லொட்டரியில் 25 ஆண்டுகளுக்கு பெருந்தொகை வென்று சாதனை
இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் இருந்து பணி நிமித்தம் சவுதி அரேபியா சென்ற தமிழர் ஒருவர் லொட்டரியில் 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.566,000 வென்று சாதனை படைத்துள்ளார்.
மறக்கமுடியாத நாட்களில் ஒன்று
இந்த வெற்றியின் மூலம் ஐக்கிய அமீரகத்திற்கு வெளியே, 25 ஆண்டுகளுக்கான பெருந்தொகை பரிசை அள்ளும் முதல் நபர் என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
@kt
தமிழகத்தின் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் 49 வயதான மகேஷ் குமார் நடராஜன். கடந்த 2019 முதல் 4 ஆண்டுகளுக்கு பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தங்கி வருகிறார். இந்த நிலையிலேயே மகேஷ் குமார் FAST5 லொட்டரியில் பெருந்தொகை பரிசாக அள்ளியுள்ளார்.
தொடர்புடைய லொட்டரியின் செயலியில் தாம் தெரிவு செய்த இலக்கங்கள் சரி என தெரியவந்தது தம்மால் நம்பவே முடியவில்லை எனக் கூறும் அவர், இது நம்பமுடியாத தருணம், எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத நாட்களில் ஒன்று இது எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக மக்களுக்கு உதவ முடிவு
பணி நிமித்தம் ஐக்கிய அமீரகத்தின் துபாய் சென்றிருந்த நிலையிலேயே FAST5 லொட்டரியில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் முதல் பரிசாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் Dh25,000 பரிசாக பெற உள்ளார்.
@kt
இந்திய நாணய மதிப்பில் சுமார் ரூ.566,000 என்றே தெரியவந்துள்ளது. இந்த வெற்றியால் ஈட்டும் தொகையில் தமது சமூக மக்களுக்கு உதவவும், இயலாதவர்களுக்கு ஆதரவளிக்கவும் முடிவு செய்துள்ளதாக மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தமது இரு மகள்களின் கல்விக்காகவும், குடும்பத்தின் எதிர்காலம் கருதியும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |