பட்டம் பெற சில நாட்களே இருக்கும் நிலையில் பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி இளைஞர்
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், பரிதாபமாக பலியாகியுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
பரிதாபமாக பலியான இந்திய வம்சாவளி இளைஞர்
அமெரிக்காவின் Massachusetts மாகாணத்திலுள்ள பென்ட்லீ பல்கலைகக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துவந்தவர் கௌரவ் ஜெய்சிங் (22).
பட்டம் பெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அவர் தன் சக மாணவர்களுடன் பஹாமாஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கௌரவும் மற்ற மாணவர்களும் தங்கியிருந்த ஹொட்டலின் பால்கனியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார் கௌரவ்.
இரவு 10.00 மணியளவில் இளைஞர் ஒருவர் பால்கனியிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மருத்துவ உதவிக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், சுயநினைவிழந்து கிடந்த கௌரவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கௌரவின் உயிர் பிரிந்துள்ளது.
கௌரவ், இந்த சனிக்கிழமை, அதாவது, 17ஆம் திகதி பட்டம் பெற இருந்த நிலையில், அவர் பரிதாபமாக பலியாகியுள்ள விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |