ஒரே நாளில் பட்டம் பெற்ற இந்திய மாணவியும் அவரை நாடுகடத்த திட்டமிட்டுள்ள பெண்ணும்
நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் இந்திய மாணவி ஒருவர் சமீபத்தில் அமெரிக்காவில் பட்டம் பெற்ற நிலையில், அவரை நாடுகடத்த முயன்று வரும் அரசு அலுவலரான பெண்ணும் அதே நாளில் பட்டம் பெற்ற சுவாரஸ்ய நிகழ்வொன்று நடைபெற்றது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், மக்கள் இரண்டு நிகழ்வுகளுக்கும் வெவ்வேறு வகையில் ரியாக்ட் செய்தார்கள் என்பதுதான்!
பட்டம் பெற்ற இந்திய மாணவி
இந்திய மாணவியான பிரியா சக்ஸேனாவை நாடுகடத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளரான கிறிஸ்டி நோயம் என்னும் பெண்.
பிரியா செய்த குற்றம், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில், மஞ்சள் விளக்குகளை அதிகாரிகள் ஒளிரச் செய்தபோது தான் இருந்த இடத்திலிருந்து அசையாததுதான், அமெரிக்காவில் அது ஒரு சிறிய குற்றமாகும்.
அதைக் காரணம் காட்டி எப்படியாவது பிரியாவை நாடுகடத்த முயன்றுவருகிறார் கிறிஸ்டி.
இந்நிலையில், சமீபத்தில், பிரியா, South Dakota School of Mines & Technology என்னும் பல்கலையில், Chemical and biological engineering துறையில் முனைவர் பட்டமும், Chemical engineeringஇல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பட்டம் பெறுவதற்காக பிரியாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பார்வையாளர்கள் நீண்ட நேரம் உற்சாகக் குரலும் கரவொலியும் எழுப்பியுள்ளார்கள்.
அதே நேரத்தில், சற்று தொலைவில் அமைந்துள்ள, Dakota State University என்னும் பல்கலையில், கிறிஸ்டிக்கு கௌரவ பட்டம் ஒன்று வழங்கப்பட, அங்கு கூடியிருந்த மக்கள் கிறிஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஊளையிட்டுள்ளார்கள்.
அத்துடன், அந்த பல்கலைக்கு வெளியே கூடியிருந்த மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளுடன் திரண்டிருந்திருக்கிறார்கள்.
ஆக, கிறிஸ்டி நாடுகடத்த முயலும் பிரியாவுக்கு ஆதரவும், கிறிஸ்டிக்கோ எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்கள் மக்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |