கடத்தப்பட்டதாக கூறி கணவரிடம் கபட நாடகமாடிய இந்திய வம்சாவளி பெண்: அம்பலமான பின்னணி
தென்னாப்பிரிக்காவில் கடத்தப்பட்டதாக கூறி கணவரிடம் 2 மில்லியன் உள்ளூர் பணம் கேட்டு கபட நாடகமாடிய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொட்டல் அறையில்
தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஹொட்டல் அறையில் இருந்து அதிகாரிகள் அவளைக் கண்டுபிடித்த நிலையில் பொய்ச் சாட்சியம் அளித்ததாக வழக்கு பதிந்துள்ளனர்.
இந்திய வம்சாவளி பெண்ணான ஃபிரோசா ஜோசப் என்பவர் பிணையில் விடுவிக்கப்பட்டு, ஜூன் 7ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக கோரியுள்ளனர்.
அவர் கூறியுள்ள தகவல்கள் முரணாக இருப்பதை அறிந்துகொண்ட பொலிசார் செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்துள்ளனர்.
திங்களன்று தொலைபேசி அழைப்பில் ஃபிரோசாவின் கணவரை தொடர்புகொண்ட ஒருவர், மனைவி கடத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் பணத்தில் 2 மில்லியன் ($109,384) தொகை அளிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
மேலும், பணம் அளிக்க தாமதமானால் ஃபிரோசாவை துன்புறுத்த இருப்பதாகவும் ஒருவர் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் ரகசிய விசாரணையை முன்னெடுத்தனர். இதில் ஃபிரோசா ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்து நாடகமாடுவது தெரியவந்தது.