விமானத்தை தரையில் மோத முயற்சி; 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி
indian pilot smit machchhar saves 180 lives in fly dubai flight: சக விமானி விமானத்தை தரையில் மோத முயற்சித்த போது, ரத்த காயங்களுடன் அந்த முயற்சியை முறியடித்து இந்திய விமானி ஸ்மித் மச்சார், விமானத்திலிருந்த 180 இஸ்ரேலிய பயணிகளின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.
இஸ்ரேல் விமானத்தை தரையில் மோத முயற்சி
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கி 180 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஃபிளைதுபாய் (Flydubai) விமானம், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த நிலையில், திடீரென 17,400 அடி சரிந்தது, 16,600 அடி உயரத்தில் இரண்டு நிமிடங்களில் இறங்கியது.

உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி, சவுதி அரேபிய வான்வெளியில் பாதையை மாற்றித் திரும்பி, சவுதி அரேபியாவின் Tabuk விமான நிலையத்தில் காலை 3 மணிக்கு தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுக்காப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
விமானியை சக விமானி கத்தியால் குத்தியதாகவும், விமானிகளின் அறையில் அவர் ஆடையில் ரத்த கறையுடன் இருந்ததாகவும் விமானத்திலிருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் விமானிகளின் அறைக்குள் நுழைந்து, கத்தியுடன் இருந்த விமானியை கட்டுப்படுத்தியதோடு, அங்கிருந்த 2 துணை விமானிகளிடம் விமானத்தை கட்டுப்பாட்டில் எடுக்குமாறு கூச்சலிட்டுள்ளனர்.
காயமடைந்த விமானிக்கு, விமானத்திலிருந்த இஸ்ரேலிய பல் மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
7500 சமிக்ஞையானது, ஒருவேளை விமானம் கடத்தப்படலாம் என்ற கவலைகளைத் தூண்டியதால், இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது இஸ்ரேல் போர் விமானங்களை அவசரமாக அனுப்பியது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி, "இன்று காலை நடந்த சம்பவம் மத்திய கிழக்கு முழுவதும், குறிப்பாக இஸ்ரேலில் உள்ள பொது மக்களையும் பாதுகாப்பு அமைப்புகளையும் முழு உஷார் நிலையில் வைத்துள்ளது.
ஆனால், விமானம் பறந்து கொண்டிருக்கும்போது விமானிகள் கைகலப்பில் ஈடுபட்டு, விமானத்தை வேறு இடத்திற்குத் திருப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது நிச்சயமாக வழக்கமான சம்பவம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக வர்ணித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், "விமானத்தில் இருந்த அனைவருடனும் விமானத்தை தரையில் மோதச் செய்வதே அந்த பயங்கரவாதியின் ஒரே நோக்கமாக இருந்தது" என தெரிவித்துள்ளார்.
180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி
இதில், தாக்கப்பட்ட ஃப்ளைதுபாய் விமானி, ஸ்மித் மச்சார் என்ற இந்தியர் என தெரிய வந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரக அரசின் 'ஃப்ளைதுபாய்' விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஸ்மித் மச்சார், அதற்கு முன்பாக, இந்தியாவின் 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்தில் 2011 முதல் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

துணை விமானி விமானத்தை தரையில் மோதி விபத்தை ஏற்படுத்த முயற்சித்த போது, ஸ்மித் மச்சார் அதனை தடுத்த போதே அவர் கத்தியால் குத்தப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தும் ரத்த காயங்களுடன் அந்த முயற்சியை முறியடித்து இந்திய விமானி ஸ்மித் மச்சார், விமானத்திலிருந்த 180 இஸ்ரேலிய பயணிகளின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.